← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2084
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்) அறிவிக்கிறார்: என் மனைவியிடம் நான் பொய் கூறலாமா? என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பொய்கூறுவதில் எந்த நன்மையும் இல்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியிடம் (இவ்வாறு செய்வேன் எனக்) கூறி வாக்குறுதி கொடுத்து(அதை நிறைவேற்ற என்னால் இயலா)விட்டால் (நான் குற்றம்பிடிக்கப்படுவேனா?) என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன் மீது குற்றமில்லை என பதிலளித்தார்கள்.