← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2028
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
அதாஉ இப்னு யசார் (ரஹ்) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என் தாயிடம் நான் அனுமதி கேட்டுச் செல்ல வேண்டுமா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) ஆம் என்றார்கள். அந்த மனிதர் நிச்சயமாக! நான் வீட்டில் அவருடனே இருக்கின்றேன் எனக் கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் நீ அனுமதி கேட்டுச் செல்வீராக! என்றார்கள். அந்த மனிதர் நான் அவருக்கு பணிவிடை செய்பவன் என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் நீ அனுமதி கேட்டுச் செல்வீராக! ஆடையின்றி அவரைக் காண நீ விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்படியானால் அவரிடம் அனுமதி கேட்டுச் செல்வீராக! என்று நபி (ஸல்) கூறினார்கள்.