← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2398
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களை (கைபருக்கு) அனுப்பிவைப்பார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) (சென்று விளைச்சலைக்) கணக்கிட்டு அதை யூதர்களுக்கும் தனக்கும் இடையே சரிபாதியாகப் ப‘கிடுவார்கள். (ஒரு நாள்) யூதர்கள் த‘களுடைய பெண்களின் ஆபரண‘களைச் சேகரித்து, அவரிடம் (சென்று லஞ்சம் கொடுக்கும் நோக்கில்) இது உ‘களுக்கு உரியது. எ‘களிடம் குறைத்து வா‘குவீராக! ப‘கிடுவதில் விட்டுக்கொடுப்பீராக! என்றார்கள். அதற்கு இப்னு ரவாஹா (ரலி) யூதர்கள் சமூகமே! நிச்சயமாக! அல்லாஹ்வின் படைப்புகளில் நீ‘கள் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர்கள். என்றாலும் இந்த வெறுப்பு நான் உ‘களுக்கு அநியாயம் செய்ய என்னைத் தூண்டவில்லை. நீ‘கள் தருவதாகக் கூறிய லஞ்சம் நிச்சயமாக! அது தடைசெய்யப்பட்ட தீய பொருளாகும். நிச்சயமாக! நா‘கள் அதை உண்ணமாட்டோம் என்று கூறினார்கள். அப்போது யூதர்கள், இதன் காரணமாகவே வான‘களும் பூமியும் நிலைபெறுகின்றன என்றார்கள்.