இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
அபூ பக்ர் இப்னு முஹம்மது (ரஹ்) அறிவிக்கிறார்:
பனூ அப்துல் அஷ்ஹல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான ஸகாத்) தர்மப்
பொருட்களை வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் வந்தவுடன் தர்மப்
பொருட்களிலிருந்து ஒரு ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள்.
அவர்களின் முகத்தில் கோபம் அறிந்துகொள்ளப்பட்டது. நபி (ஸல்)
அவர்களுடைய இரு கண்களும் சிவந்துவிடுவதன் மூலம் அவர்களின்
முகத்தில் கோபம் அறிந்துகொள்ளப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் இந்த
மனிதர் எனக்கும் அவருக்கும் அனுமதியில்லாத பொருளை என்னிடம்
கேட்கிறார். அவருக்கு அதை நான் கொடுக்காமல் இருந்தால் (அவ்வாறு)
கொடுக்காமல் இருப்பதை நான் வெறுக்கிறேன். அதை அவருக்கு
நான் கொடுத்துவிட்டால் எனக்கும் அவருக்கும் அனுமதியில்லாத
பொருளையே அவருக்கு நான் கொடுத்திருப்பேன் என்று கூறினார்கள்.
அப்போது அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரே! அதிலிருந்து எதையும்
நான் உ‘களிடம் கேட்கமாட்டேன் என்றார்.