← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2731
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவிக்கிறார்: அன்ஸாரிகளில் ஒரு மனிதர் தன்னுடைய கருப்பு நிற அடிமைப் பெண்ணுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வது என்மீது கடமையாக உள்ளது. நான் இவளை விடுதலை செய்யலாமா? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த அடிமைப் பெண்ணிடம் ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாருமில்லை என்று நீ சாட்சி கூறுகிறாயா?’ என்று கேட்டார்கள். அவள் ‘ஆம்’ என்றாள். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? என்று மீண்டும் கேட்க, அவள் அதற்கும் ‘ஆம்’ என்றாள். மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நீ உறுதியாக நம்புகிறாயா? என்று கேட்க, அதற்கும் அவள் ‘ஆம்’ என்றாள். அப்படியானால் இவளை நீ விடுதலை செய்வீராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.