இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அல்அன்ஸாரீ (ரஹ்)
அறிவிக்கிறார்:
என்னுடைய தாய் (மரணிப்பதற்கு முன்) மரண சாசனம் செய்ய
விரும்பினார். பிறகு அவர் காலை விடிந்தவுடன் (கூறிக்கொள்ளலாம்
என அதை) தள்ளிப்போட்டார். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
அடிமையை விடுதலை செய்ய அவர் நாடியிருந்தார். அவர் சார்பில்
நான் அடிமையை விடுதலை செய்தால் இது அவருக்கு பலன்தருமா?
என்று காசிம் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு
அவர் (பின்வருமாறு) பதிலளித்தார்.
என்னுடைய தாய் மரணித்துவிட்டார். அவர் சார்பில் நான் அடிமையை
விடுதலை செய்தால் அது அவருக்கு பலன் அளிக்குமா? என்று சஅத்
இப்னு உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.